Best Investment Options to Grow Your MONEY ?
குறைவான காலத்தில் அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்காக இந்தியாவில் பல வழிகள் இருக்கிறது
அதற்கு நாம் சம்பாதிக்கும் பணத்தை எங்கே நாம் சேமித்து வைக்கிறோம் எந்த இடத்தில் நாம் முதலீடு செய்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியமான விஷயம்
அதிகமான ரிஸ்க் எடுப்பதன் மூலம் அதிகமான பணத்தை நம்மால் சம்பாதிக்க முடியும்
வங்கிகளில் உங்களுடைய பணத்தை முதலீடு செய்கிறீர்கள் என்றால் அங்கே உங்களுக்கு ரிஸ்க் என்பது சுத்தமாக இருக்காது உங்களுடைய பணம் உங்களுடைய கைகளுக்கு திரும்பவும் வந்துவிடும் என்பதற்கு முழு கேரண்டி கொடுக்கப்படும்
ஆனால் அதைத் தவிர பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், பாண்ட் பேப்பர் , பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் இன்வெஸ்ட்மெண்ட் செய்வது போன்ற அதிக அளவு நான் ரிஸ்க் எடுத்து நம்முடைய பணத்தை முதலீடு செய்யும் பொழுது அதனுடைய ரிட்டன் என்பது அதிகமான வட்டியில் நமக்கு கிடைக்கிறது
அதைத் தவிர வங்கிகளில் இருக்கக்கூடிய சேவிங் கணக்குகளில் போடக்கூடிய பணங்கள் அனைத்தும் நம்முடைய கைகளுக்கு திரும்பவும் ரிட்டன் கிடைக்கும் ஆனால் அது குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும்
ஆனால் அதற்கு வங்கிகள் முழு உத்தரவாதம் அளித்து உங்களுடைய பணத்தை முழுவதும் திரும்பவும் உங்களுடைய கைகளுக்கு கொடுத்து விடும் என்பதற்கு வங்கிகள் முழு உத்திரவாதம் கொடுக்கும்
ஆனால் அதிக அளவு ரிட்டன் கிடைக்கக்கூடிய முதலீடுகளில் பங்குச்சந்தை மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் ஆபத்து என்பது அதிகமாக காணப்படும்
எந்த அளவு ஆபத்து என்றால் நீங்கள் குறைந்தது பங்குச்சந்தியை பற்றி ஓரளவு உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்
அப்படி தெரியவில்லை என்றால் அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டு அதன் பிறகு பங்குச் சந்தை பக்கத்தில் வரவேண்டும்
அவ்வாறு அதை தெரிந்து விட்டு நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களுடைய வட்டி விகிதம் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்
அதனால் நீங்கள் சேமிக்கும் பணம் ஆனது குறைந்தது 10 லிருந்து 12 சதவீதம் வரைக்கும் அதிகமான தொகை ரிட்டன் கிடைப்பதால் நல்ல லாபத்துடன் வாழ முடியும்
பங்குச்சந்தை என்பது என்ன என்பதை பற்றி பொழுது நாம் சுருக்கமாக பார்க்கலாம்
இந்தியாவில் உள்ள சிறிய கம்பெனிகள் மற்றும் பெரிய கம்பெனிகள் அனைத்தும் IPO தாக்கல் செய்து தங்களுடைய நிறுவனத்தை பெரிதாக்க வேண்டும் என்பதற்காக பங்குச்சந்தைக்கு வருகிறது
பணத்தை வளர்க சிறந்த வழி என்ன ?
இந்தியாவில் இரண்டு விதமான பங்குச் சந்தைகள் இருக்கிறது
- மும்பை பங்குச்சந்தை BSE
- இந்தியன் பங்குச்சந்தை NSE
இந்த பங்குச் சந்தைகள் முழுவதும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மற்றும் செபி ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் முழுவதுமாக இருக்கிறது
அதனால் இந்த பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கும்போது அதற்கு தக்க பதிலடி தக்க தண்டனையை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மற்றும் செபி இரண்டும் சேர்த்து கொடுக்கும்
அதனால் பங்குச்சந்தியை பற்றி அறிந்து விட்டு நாம் எந்த கம்பெனியில் முதலீடு செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதை அறிந்து நல்ல லாபம் தரக்கூடிய சிறந்த கம்பெனிகளை ஆராய்ச்சி செய்து அவற்றின் முழு விவரங்களையும் அறிந்து கொண்டு அவற்றில் நாம் முதலீடு செய்யும் பொழுது சந்தோசமாகவும் அதிகமான ரிட்டன்ஸ் கிடைக்கும் படிக்கும் நம்மால் வாழ முடியும்
அதைத் தவிர ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கொடுக்கின்ற SGB சவரிங் கோல்ட் பாண்டு என்று அழைக்கப்படும் பாண்டுகளையும் நம்மால் வாங்க முடியும்
இது ஒரு வருடத்தில் இரண்டு முறை மட்டுமே ரிசர்வ் பேங்க் ஆனது, அனைத்து வங்கிகளிலும் போஸ்ட் ஆபீஸ்களிலும் கொடுக்கப்படும்
இவற்றை நாம் ஒவ்வொரு கிராமமாகவும் வாங்கிக் கொள்ளலாம் அதிகமாக 400 கிராம் வரைக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் வாங்க முடியும்
இவற்றின் மதிப்பு என்னவென்றால் குறைந்தது எட்டு வருடம் அப்படியே நாம் வைத்துக் கொள்ள வேண்டும்,
அவ்வாறு செய்யும்பொழுது வருடத்திற்கு 2.5% வட்டி விகிதத்தோடு அன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் மதிப்பு எவ்வாறு இருக்கிறதோ அதனுடைய மதிப்பிற்கு மொத்தமாக நமது கிடைக்கும்
இதில் எந்தவிதமான வரியும் இல்லை என்பதால் இது உங்களுக்கு ஒரு சிறந்த ஆப்பராக காணப்படும்
மற்றபடி HDFC ICICI போன்ற வங்கிகளில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கொடுக்கின்ற எக்கச்சக்கமான பாண்டு பேப்பர்கள் இருக்கும்
அவற்றிற்கும் வட்டி குறைவாகவும் அதிகமாகவும் காணப்படும் ஆனால் அவற்றிற்கு முடிவில் வரிவிளக்கு என்பது இருக்காது ஆனால் அவற்றிலும் நீங்கள் இன்வெஸ்ட்மென்ட் செய்து பணம் சம்பாதிக்க முடியும்
இவை எல்லாவற்றையும் காட்டிலும் ஷேர் மார்க்கெட் மற்றும் பாண்டு பேப்பர்களில் நீங்கள் அதிக அளவு முதலீடு செய்து அதிக அளவு வட்டி விகிதத்தை பெற்றுக் கொள்ள முடியும்
கடைசியாக நாம் அனைவரும் முக்கியமாக செய்ய வேண்டியது தங்கத்தின் மீது முதலீடு செய்வது சிறந்தது
இன்றைய காலகட்டத்தில் மாதம் ஒரு கிராம் தங்க காயினை அனைவரும் வாங்குவது சிறப்பாக இருக்கும்
மாதம் மாதம் ஒவ்வொரு கிராம் தங்க காயின் வாங்கும் போது அதற்கு செய்கூலி செய்தாலும் மிகவும் குறைவாகவும் வரியும் மிகவும் குறைவாகவும் காணப்படும் 10 வருடங்கள் கழித்து அதை நிற்கும் பொழுது அதனுடைய மதிப்பு என்பது அதிக அளவு காணப்படும்
அதனால் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்து கொண்டு முதலீடு செய்வது சிறந்தது
இது எல்லாவற்றையும் காட்டிலும் இவற்றை நீங்கள் முதலீடு செய்யும் முன்பு அதனுடைய முழு விபரங்களையும் அறிந்து விட்டு முதலீட்டை துவங்குவது தான் மிக மிக சிறந்தது என்று சொல்லலாம்.