What to do to get rich quick? விரைவில் பணக்காரர் ஆக என்ன செய்ய வேண்டும்?
வாழ்க்கையில் நாம் அனைவரும் ஏதோ ஒரு இடத்தில் வேலை செய்து கொண்டிருப்போம்
குறிப்பாக ஒரு தனிநபர் குறைந்த அளவில் டிரைவராகவோ கடைகளிலோ வேலை செய்து கொண்டிருப்பார்
அல்லது படித்த ஒரு நபர் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்பார்
ஆனால் எங்கே வேலை செய்தாலும் நமக்கு மாதாமாதம் சம்பளம் என்பது கிடைத்துக் கொண்டே இருக்கும் அது குறைந்த தொகையாக இருந்தாலும் சரி மிகப்பெரிய தொகையாக இருந்தாலும் சரி
அதை நாம் எவ்வாறு பயன்படுத்தி எவ்வாறு பணக்காரர் ஆகலாம் என்பது தான் முதலாவது யோசிக்க வேண்டும்
எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை விட எவ்வளவு பணம் சேர்த்து வைக்கிறோம் என்பது தான் முக்கியம்
எவ்வளவு பணம் சேர்த்து வைக்கிறோம் என்பதைவிட அந்த பணத்தை எங்கே சேர்த்து வைக்கிறோம் என்பதில் தான் நாம் பணக்காரராக போகிறோமா இல்லையா என்பதை முடிவு செய்கிறது
அதனால் உங்களுடைய சம்பளம் 20,000 ரூபாயாக இருந்தாலும் 2 லட்சம் ரூபாயாக இருந்தாலும் உங்களுடைய வருமானத்தில் இருந்து 30% பணத்தை நீங்கள் உங்களுடைய சேமிப்பிற்கு என்று எடுத்து இருபது முதல் 40 வருடங்கள் சேமிக்கும் பொழுது மிகப்பெரிய பணக்காரராக நிச்சயம் உருவெடுக்க முடியும்
ஆனால் 20 முதல் 40 வருடம் என்பது மிகப்பெரிய கால அவகாசமாக இருப்பதால் இதனால் நாம் அதிகமான விஷயங்களை கற்றுக் கொள்வோம் மற்றும் அதிகமான தவறுகளையும் செய்வோம்
அதனால் நாம் சில விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் அவ்வாறு கடைபிடிக்கும் பொழுது நிச்சயம் நம் பணக்காரர் ஆகி மிகப்பெரிய ஆளாக வாழ்வோம்
அதனால் மிகப்பெரிய பணக்காரராக மாறுவதற்கு நாம் எந்தெந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்
நாம் அனைவரும் வேலை பார்த்துக் கொண்டிருப்பதும் வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைத்துக் கொண்டே இருக்கும் அதில் 30 சதவீதம் பணத்தை எடுத்து சேமிக்க வேண்டும்
அதோடு மட்டுமல்லாமல் வருமானம் அதிகரிக்கும் பொழுது செலவுகளையும் அதிகரிக்க கூடாது
வருமானம் அதிகரிக்கும் பொழுது வருமானத்திற்கு ஏற்ற சேமிப்புகளை மட்டுமே அதிகரிக்க வேண்டும்
ஏனென்றால் எந்த அளவிற்கு நாம் செலவுகளை குறைக்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய கையில் அதிகமான பணம் இருக்கும்
செலவுகளை குறைப்பதற்கு மாத மாதம் பட்ஜெட் போட வேண்டும்
உங்க வீட்டில் உள்ள அனைத்து நபர்களும் ஒன்றாக சேர்ந்து உங்களுடைய மாத வருமானம் எவ்வளவு என்பதை பேப்பரில் எழுதி முழு செலவையும் எழுதி சேமிப்பையும் எழுதி அதன்படி செலவு செய்யும் பொழுது உங்களுடைய பட்ஜெட் சிறந்த முறையில் அமையும்
இரண்டாவதாக எதிர்காலத்தை குறித்து பயமில்லாமல் இருக்கக்கூடாது
முக்கியமாக நாம் பணக்காரராக மாற வேண்டும் என்பதற்காக இப்பொழுது பணம் செய்வதற்கு ஆரம்பிக்கிறோம்
ஆனால் நான் பணக்காரர் ஆகுவதற்கு 20 லிருந்து 40 வருடங்கள் ஆகும் என்பதை நாம் இப்பொழுதோ அறிந்து விட்டோம்
அதனால் அந்த 40 வருடம் மற்றும் அதன் பிறகு பணக்காரராக மாறிய பின்பு நாம் உயிர் வாழ வேண்டும் அல்லவா அதை குறித்தும் நாம் இப்பொழுது யோசிக்க வேண்டும்
அதனால் உங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான இன்சூரன்ஸ்கள் என்னென்ன என்பதை அறிந்து அவற்றை சரியான முறையில் செய்து வைத்திருப்பது சிறந்தது
ஏனென்றால் ஒரு மனிதனுக்கு எந்த நேரத்தில் என்ன நிகழும் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை
அதனால் நாம் உயிர் வாழ வேண்டும் அதுவும் நிம்மதியுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் பணத்தை சேர்த்து வைக்கிறோம் அதை வைத்து நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக இப்பொழுதே குறைந்த செலவில் இருக்கக்கூடிய இன்சூரன்ஸ் களை தேர்ந்தெடுப்பது நல்லது
மூன்றாவதாக நாம் சேமிக்க வேண்டும் என்று நினைப்பதற்கு நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் சரி அடுத்த வருடத்தில் இருந்து சேமிப்பை துவங்கலாம் என்று நினைப்பது முட்டாள்தனமாகும்
சேமிக்க வேண்டும் என்கின்ற வார்த்தையை கேட்டவுடன் நீங்கள் எப்பொழுது கேட்கிறீர்களோ அந்த நிமிடத்தில் இருந்தே சேமிப்பதற்கான வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்
உதாரணமாக சேமிப்பு என்று சொல்ல உடன் அனைவருக்கும் வங்கிகள் தான் ஞாபகத்திற்கு வரும்
வங்கிகளில் குறைந்த அளவு லாபம் மட்டுமே கிடைக்கும் ஆனால் அதில் எந்தவிதமான ரிஸ்க் இல்லாமல் இருப்பதால் உங்களுடைய தேர்வு எதுவாக இருக்க வேண்டும் என்பதை அறிய வேண்டும்
ஏனென்றால் ரிஸ்க் குறைவாக இருக்கக்கூடிய பத்திர பேப்பர்கள் மற்றும் தங்கம் மற்றும் ரிசர்வ் பேங்கால் அங்கீகரிக்கப்பட்ட பத்திர பேப்பர்களை வாங்கி அதில் உங்களுடைய முதலீடுகளை செய்வதன் மூலம் சிறந்த முறையில் பணம் சம்பாதிக்கலாம்
அதைத் தவிர குறைந்த அளவில் இருக்கக்கூடிய ரிஸ்க்கு வங்கியில் நம்முடைய பணத்தை சேர்த்து வைக்கலாம் ஆனால் அதில் அதிகமான ரிட்டன் என்பது கிடைக்காது குறைவாகவே கிடைக்கும்
அதைத் தவிர அதிக அளவு ரிஸ்க் இருக்கக்கூடிய பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் அதனை அறிந்து சரியான முறையில் செய்வதன் மூலம் சிறந்த லாபத்தை பெற முடியும்
அதனால் சேமிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் பொழுது அதற்கான வழி என்ன என்பதை ஆராய ஆரம்பியுங்கள்
அதை உடனடியாக துவங்குங்கள் என்பதுதான் இதிலிருந்து கிடைக்கிறது
உங்களுடைய வருமானத்தை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
அதாவது உங்களுடைய திறமைகளை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் மற்றும் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும் மற்றும் அதை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்
ஏனென்றால் ஒவ்வொரு நபரும் சராசரியாக ஒரு வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள் அதிலிருந்து மாதம் ஒரு தொகை அவர்களுக்கு சம்பளமாக கிடைத்துக் கொண்டே இருக்கும்
ஆனால் இது தவறான விஷயமாகும் உங்களுடைய திறமைகளை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும் ஒவ்வொரு மனிதருக்கும் குறைந்தது மூன்றில் இருந்து நான்கு இடத்தில் இருந்து சம்பளம் வந்து கொண்டே இருக்க வேண்டும் அந்த அளவிற்கு நம்முடைய திறமைகளை வளர்க்க வேண்டும்
எந்தெந்த விதங்களில் பணம் சம்பாதிக்கலாம் மற்றும் எந்தெந்த இடத்தில் நாம் முதலீடு செய்தால் நமக்கு சரியான பணம் வரும் என்பதை அறிந்து அந்தந்த வேலைகளை எல்லாம் செய்து ஒரு மாதம் ஆனதும் நான்கிலிருந்து ஐந்து வரிகளில் இருந்து நமக்கு மாதம் மாதம் சம்பளம் வந்து கொண்டே இருக்க வேண்டும் அவ்வாறான விஷயங்களை நாம் தேர்ந்தெடுத்து அது என்ன என்பதை உன்னிப்பாக அறிந்து அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சம்பளத்தை நான்கு ஐந்து இடங்களில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்
இல்லையென்றால் அதற்காக உங்களுடைய திறமைகளை வளர்த்து அதன்படி செயல்பட ஆரம்பிக்க வேண்டும்
முக்கியமாக தேவையில்லாத பொருட்களை வீட்டில் வாங்கி வைப்பதை தவிர்க்க வேண்டும்
அதாவது நீங்கள் மொபைல் போன் வைத்திருப்பீர்கள் மற்றும் அதை வருடத்திற்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருப்பீர்கள்
உங்களுடைய பைக் மொபைல் போன் லேப்டாப் கம்ப்யூட்டர் போன்றவற்றை தேவையில்லாமல் வாங்குவதை தவிர்க்க வேண்டும்
உங்களுடைய வேலைக்கு மற்றும் உங்களுடைய வீட்டிற்கு அத்தியாவசிய தேவையாக என்ன பொருள் தேவைப்படுகிறதோ அதை மட்டும் நாம் வாங்க வேண்டும் தேவைப்படாத மற்றும் பல வருடங்கள் கழித்து நமக்கு பயன்படக்கூடிய தேவையில்லாத பொருட்களை நம் வாங்க கூடாது
அவ்வாறு நமக்கு இப்போது தேவைப்படாத பின் நாட்களில் தேவைப்படக்கூடிய பொருட்களை நாம் இப்போது பணம் கொடுத்து வாங்கினோம் என்றால் நமக்கு வீட்டில் தேவைப்படக்கூடிய பொருட்களை நாம் விற்றாக வேண்டும் என்கின்ற இக்கடான சூழ்நிலையில் இருந்து மாட்டிக் கொள்வோம்
அதனால் வீட்டிற்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து தேவையற்ற பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்
பணம் சம்பாதிக்க வேண்டும் மற்றும் பணக்காரராக வேண்டுமென்று பணத்தைப் பற்றி பேசும் பொழுது அனைவருக்கும் முக்கியமாக இருக்கக்கூடிய பிரச்சனை கடன்
உங்களிடத்தில் இருக்கக்கூடிய கடன்கள் மற்றும் தேவையற்ற கடன்களை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டாம்
மொபைல் போன் நீங்கள் வாங்கினீர்கள் என்றால் உங்களுடைய தகுதிக்கு மீறி அதிகமான பணத்திற்கு மாதம் தவணை கட்டும் முறையில் வாங்குவதை தவிர்க்க வேண்டும்
மற்றும் வீட்டிற்கு தேவையான எலக்ட்ரிஷன் பொருள்கள் அனைத்தும் மாதம் தவணை கட்டும் முறையில் கிடைக்கிறது என்பதால் அவற்றை அத்தியாவசிய தேவை இன்றி வாங்குவதை தவிர்க்க வேண்டும்
நீங்கள் மாதாமாதம் தவறை முறையில் பனம் கட்டி வாங்க வேண்டும் என்று அதிகமான வங்கிகள் உங்களுக்கு கடன் கொடுக்க காத்திருக்கிறார்கள்
அந்த சந்தர்ப்பத்தை தேவையான பொருட்களில் மட்டும் பயன்படுத்தி தேவையற்ற பொருட்களாக இருக்கக்கூடிய வாஷிங் மெஷின் டிவி பிரிட்ஜ் மொபைல் போன் பைக் போன்றவற்றை வாங்க கூடாது
கடன் கொடுக்கிறார்கள் என்பதற்காக அவசியம் இல்லாத பொருட்களை வாங்குவதன் மூலம் அதிகமான கடன்களில் மூழ்கி விடுவோம்
அதனால் கடன் அனைவருக்கும் நிச்சயம் இருக்கும் இருக்கக்கூடிய கடன்களை முடித்துவிட்டு அதன் பிறகு கடன் வாங்க கூடாது என்கின்ற நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்
கடன் வாங்காமல் மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் மற்றும் ஒரு சிறிய தொகையை எடுத்து வைப்பதன் மூலம் மிகப்பெரிய பணக்காரராக மாற முடியும்.