வங்கிக் கணக்கில் பணத்தை எவ்வாறு சிறந்த முறையில் சேமிப்பது?
பணத்தை சேமிக்க வேண்டும் என்று அனைவரும் சொன்ன உடனையே முதலாவது நியாபகத்திற்கு வருவது வங்கி கணக்கு தான்
ஏனென்றால் பணம் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் நாம் வங்கியில் தான் வைத்திருக்கிறோம் சேமிப்பு என்றவுடன் முதலாவது ஞாபகத்தில் வருவது இந்த வங்கியில் தான் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வருகிறது
ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரது சம்பள பணமும் வங்கி கணக்கில் தான் வந்து சேருகிறது இருப்பினும் அனைவராலும் பணத்தை சேமிக்க முடியாமல் தினம் தினம் கூகுள் பே போன் பே டி எம் போன்ற ஆப்புகள் மூலம் பணத்தை அனைவரிடத்திலும் மாற்றி மாற்றி அனுப்பி விடுவதால் பணம் ஒரு மாதத்திற்கு உள்ளே காலியாகி விடுகிறது
இப்படி இருக்க வங்கிக் கணக்கில் பணத்தை எவ்வாறு சிறந்த முறையில் சேமிப்பது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்
வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் பிரத்தேகமான ஒரு வங்கியத்தை கொடுத்து இருப்பார்கள் அதில் நமக்காக தனியாக வங்கிக் கணக்கு என்னும் கொடுக்கப்பட்டிருக்கும்
அதனால் நமக்கான ஒரு வங்கி கணக்கு தனியாக இருக்கும் பொழுது நமக்கான உரிமைகளை கொடுக்கப்படுவது என்னவென்றால் FD, RD ,PPF போன்ற திட்டங்கள் வங்கியில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓபன் செய்து அதில் நம்முடைய பணத்தை மாதம் அல்லது மொத்தமாகவும் போட்டு வட்டியை பெற்றுக் கொள்ள முடியும்
வங்கியில் சேமிப்பதற்கு சிறந்த மூன்று வழிகளில் இப்பொழுது உங்களுக்கு கொடுத்துள்ளேன் அதாவது FD, RD, PPF இந்த மூன்று வழிகளும் வங்கியில் சேமிப்பதற்கான சிறந்த வழிகள் ஆகும்
இவை அனைத்திலும் அதிகமான வட்டி விகிதங்கள் மற்றும் அனைத்து வங்கி கணக்கிலும் இந்த அக்கவுண்டை நீங்கள் திறந்து நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்
அதனால் இந்த மூன்றையும் சேமிப்பதற்கான வங்கியில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை சேமிப்பு திட்டங்கள் என்று இந்த மூன்றையும் குறிப்பிடலாம் இவற்றைப் பற்றி இப்பொழுது விரிவாக ஒவ்வொன்றாக பார்க்கலாம்
RD என்பது மாத மாதம் நாம் கட்டும் தொகையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு முறையாக மொத்தமாகவும் பணத்தை போட்டுக் கொள்ள முடியும்
உதாரணத்திற்கு சிறிய தொழில் செய்பவர்கள் அல்லது வேலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் மாதம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் மூவாயிரம் என நீங்கள் சேமிக்க தொடங்கினீர்கள் என்றால் இந்த கணக்கு உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்
இவற்றில் உங்களுடைய வங்கி அட்டையை காண்பித்து ஒரு புதிய கணக்கை இதில் திறக்க வேண்டும்
அதன்பிறகு நீங்கள் தேவைக்கேற்றார் போல் மாதம் எந்த அமௌன்ட் நீங்கள் சேமிக்க வேண்டுமோ அதை இந்த வங்கி கணக்கிற்கு உங்களுடைய சேவிங் அக்கவுண்டில் இருந்து RD வங்கி கணக்கிற்கு மாற்ற வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் சேமிக்கும் தொகையை அங்கே சென்று விடும்
இதை நீங்கள் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளலாம் 4% முதல் 6% வரை உங்களுக்கு வட்டி அதிகமாகிக் கொண்டே இருக்கும் எவ்வளவு காலம் இதை வைத்திருக்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல் வட்டி சதவீதம் மாறிக்கொண்டே இருக்கும்
ஆனால் நீங்கள் பணத்தை இறுதியாக எடுக்கும் பொழுது 10% இந்தியாவுக்கு வரி சலுகை கட்ட வேண்டியது இருக்கும் அதை கழித்து விட்டு மீதி தொகையை உங்களுக்கு தருவார்கள்
அதனால் இந்த ஆஃபரை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் குறைந்தது பத்திலிருந்து 20 வருடம் நீங்கள் சேமிக்க தொடங்கினீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு சிறந்த வட்டி இந்த பணத்தில் இருந்து உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்
FD என்பது பிக்சட் டெபாசிட் என்று கூறுவார்கள்
உங்களுடைய கையில் மொத்தமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணம் இருக்கிறது என்றால் அதை எங்கே சேமித்து வட்டியை பெற்றுக் கொள்ள முடியும் என்று யோசிக்கும் நபர்களுக்கு தான் இந்த பிக்சட் டெபாசிட் மிகவும் உதவிகரமாக இருக்கும்
இதில் ஒரு முறை பெரிய அமௌன்ட் நீங்கள் போட்டு விட்டீர்கள் என்றால் பின்பு எத்தனை வருடத்திற்காக அதை பயன்படுத்திக் கொள்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல் உங்களுக்கு வட்டி விகிதம் கிடைக்கும்
4% முதல் 6% வரை காலத்திற்கு ஏற்றார் போல் வட்டி விகிதம் கிடைக்கும் ஆனால் இதை நீங்கள் ஒரு முறை பயன்படுத்திய பின்பு அதன் பக்கத்திற்கு செல்லவே முடியாது உதாரணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் ஐந்து வருடத்திற்கு என்று போடுகிறீர்கள் என்றால் மாதாமாதம் தொகைக்கு ஏற்றார் போல் செலுத்த முடியாது ஆனால் தேவைக்கு ஏற்றார் போல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த அக்கவுண்டை முடித்துக் கொண்டு உங்களுடைய பணத்தை உடனடியாக எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது
ஆனால் நீங்கள் கடைசியாக இதை எடுக்கும் பொழுது 10% வரி பணத்தை இந்தியாவிற்கு நீங்கள் செலுத்த வேண்டியது இருக்கும்
PPF இந்த வங்கி கணக்கு தான் அனைத்து சேமிப்பாளர்களுக்கும் மிகச் சிறந்த கணக்கு என்றே சொல்லலாம்
மாதாமாதம் 500 முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்திக் கொண்டே இருக்கலாம் அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு 1.50 லட்சம் வரை மட்டுமே செலுத்த முடியும்
இந்த வங்கிக் கணக்கில் 7.01% வட்டி கொடுக்கப்படுகிறது இது மற்ற சேமிப்பு கணக்குகளை காட்டிலும் இதில் அதிகமான வட்டிகள் கிடைக்கிறது
ஆனால் முதல்முறையாக அக்கவுண்டை தொடங்கிய பின்பு 15 வருடம் கழித்து தான் இதனுடைய முழு தொகையும் உங்களால் எடுக்க முடியும்
ஐந்து வருடத்திற்கு மேல் இதனுடைய குறைந்தபட்ச தொகையிலிருந்து நீங்கள் வருடம் ஒரு முறையினை எடுத்துக் கொள்ளலாம் அதற்கு அனைத்திற்கும் நீங்கள் வரி செலுத்த வேண்டியது இருக்கும்
ஆனால் 15 வருடம் கழித்து நீங்கள் எடுக்கின்ற தொகைக்கு வரியதும் செலுத்த தேவையில்லை மற்றும் நீங்கள் செலுத்திய தொகையுடன் 7.01% உங்களுக்கு வட்டியும் கிடைப்பதால் இது ஒரு மிகச்சிறந்த சேமிப்பு கணக்கு என்றே சொல்லலாம்
மற்றும் நீங்கள் எந்த வங்கியில் உங்களுடைய சேமிப்பு கணக்கை வைத்திருக்கிறீர்களோ அந்த வங்கியில் உங்களுக்கான மொபைல் பேங்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கும்
அதாவது நம்முடைய வங்கிக் கணக்கில் இருக்கும் தொகை மற்றும் யாருக்கு பணம் செலுத்த வேண்டும் என்பதை பற்றி அந்த வங்கியின் உரிமையான மொபைல் ஆப் மூலம் அனைத்தையும் செய்து கொள்ளும் வசதி இப்பொழுது அனைத்து வங்கிகளும் இருக்கிறது இதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்
அந்த மொபைல் ஆப் மூலம் இதில் ஏதேனும் கணக்கை நீங்கள் துவங்கி நீங்களே உங்களுடைய பணத்தின் சேமிப்பை உடனடியாக துவங்கலாம்
அழகு இதனுடைய முழு விவரத்தை பற்றியும் அறிந்துகொண்டு செய்ய வேண்டும் என்றால் உடனடியாக உங்களுடைய வங்கிக் கிளையை அணுகி அதனுடைய முழு விவரத்தையும் அறிந்து உடனடியாக சேமிப்பை துவங்கலாம்
இவை அனைத்தும் சேமிப்பின் முதல் படி என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு மிகவும் எளிதாக சேமிப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள வசதி என்று இவை அனைத்தையும் சொல்லலாம்
ஏனென்றால் நாம் அனைவரிடத்திலும் நிச்சயம் ஒரு வங்கி கணக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது அவற்றில் நாம் உடைய சம்பளம் மற்றும் நம்முடைய உறவினர்கள் யாரேனும் நமக்கு பணம் அனுப்பினார்கள் என்றால் வங்கி கணக்கின் மூலமாகவே நாம் அவற்றை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்
அதனால் நாம் பயன்படுத்தும் வங்கி கணக்கின் மூலமாகவே நீங்கள் ஒரு சிறப்பான சேமிப்பை மிகவும் எளிதாக துவங்கி உங்களுடைய சேமிப்பை இன்றைய துவங்கலாம்