What Is IPO In Share Market Explained In Tamil
I P O – Tamil ( INITIAL PUBLIC OFFERING )
ஒரு நிறுவனம் தொடங்கப்படுவதற்காக முதலாவது அந்த நிறுவனத்தின் தலைவர் தன்னிடத்தில் இருக்கக்கூடிய பணங்களை கொண்டு வந்து அந்த நிறுவனத்திற்காக முதலீடு செய்வார்
அந்தப் பணம் பத்து வில்லை என்றால் வங்கிகளில் சென்று நான் இவ்வாறு நிறுவனம் துவங்கப் போகிறேன் எனக்கு கடன் கொடுங்கள் என்று சொல்லி கடன் கேட்பார்
அந்த பணமும் பத்தவில்லை என்றால் இறுதியாக என்னுடைய நிறுவனத்தை நான் வளர்ப்பதற்காக மக்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என்று சொல்லி அனைத்து மக்களிடத்திலும் சென்று பணத்தை வசூல் செய்து அந்த கம்பெனியை முன்னேற்றுவது தான் இந்த IOP ஆகும்
முக்கியமாக அனைவரும் முதலாவது கம்பெனியை துவங்க வேண்டும் என்பதற்காக மக்களிடத்தில் சென்று இந்த IPO மூலம் மக்களிடத்தில் பணத்தை வாங்க முடியாது இதற்காக அதிகமான விதிகள் இருக்கிறது
உதாரணத்திற்கு நீங்கள் முதலாவது ஒரு கம்பெனியை வைத்து நடத்துகிறீர்கள் என்றால் அந்த கம்பெனி மிகப்பெரிய கம்பெனி ஆக மாறி இருக்கிறது மற்றும் அதனுடைய நம்பகத்தன்மையை பெற்று அனைத்து மக்களிடத்திலும் அது சென்று இருக்கிறது என்றால் அந்த கம்பெனியை நீங்கள் பங்குச்சந்தைக்கு கொண்டு வரலாம்
அவ்வாறு கொண்டு வருவதன் மூலம் முதலாவது IPO தாக்கல் செய்து மக்களிடத்திலிருந்து பணத்தை வசூல் செய்து அந்த கம்பெனியை மென்மேலும் வளர்ச்சி கம்பெனியாக மாற்றலாம் அல்லது அந்த கம்பெனியில் ஏதேனும் கடன் இருக்கிறது என்றால் அந்த கடனை அடைத்து விட்டு மக்களுக்கும் அந்த கம்பெனியின் முதலாளிக்குமான கம்பெனியாக அதை மாற்றி விடலாம்
அப்படி இல்லை என்றால் ஏற்கனவே முதலாவது வைத்திருக்கின்ற ஒரு நபர் மற்றொரு புதிய கம்பெனியை ஆரம்பிக்கப் போகிறேன் என்று நினைக்கும் பொழுது அந்த முதல் கம்பெனியின் நம்பிக்கையை வைத்து இரண்டாவது கம்பெனியை துவங்கும் போது மக்களிடத்தில் சென்று IPO மூலம் பணத்தை வசூல் செய்ய முடியும்
ஏனென்றால் முதலாவது கம்பெனியை அவர் மக்களிடத்தில் நம்பிக்கை பெறுவதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டாரோ அந்த பலனாக இரண்டாவது கம்பெனிக்கும் முதலாவது தூங்கும்போதே நேரடியாக மக்களிடத்தில் சென்று IPO மூலமாக பணத்தை வசூல் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்
IPO செய்வதன் மூலம் என்னென்ன நன்மைகள் இருக்கிறது?
நிறுவனத்தின் தலைவர்கள் அதிகமாக கடன் வாங்கி இருக்கிறார்கள் என்றால் அந்த கடனை அடைத்து விட்டு மக்களுக்கும் பாதி பங்கை கொடுத்துவிட்டு மற்றும் அந்த நிறுவனத்தின் தலைவர்கள் பாதி பங்கு வைத்திருக்கும் பொழுது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியானது வேறு எங்கும் செல்லாமல் நேரடியாக மக்களுக்கு லாபத்தை கொடுக்கும் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைவர்களுக்கு லாபம் கொடுக்கும்
இதனால் மக்களிடத்தில் இருந்து வாங்கிய பணத்திற்கு அவர்கள் மாதாமாதம் வட்டி கட்ட வேண்டிய தேவை கிடையாது
குறிப்பாக வங்கிகளில் இருந்து நீங்கள் வாங்கினீர்கள் என்றால் அதற்கு மாதாமாதம் வட்டி கட்டி கொண்டே இருக்க வேண்டும் அதனால் அதிகமான பணத்தை ஒவ்வொரு மாதமும் அந்த கம்பெனியின் முதலாளிகள் இழந்து கொண்டே இருப்பார்கள்
ஆனால் இவ்வாறு IPO தாக்கல் செய்வதன் மூலம் ஒவ்வொரு பங்குகளையும் விற்கும் பொழுது அதனுடைய லாபம் என்பது ஒரு சில ஆண்டுகள் கழித்து மக்களே நேரடியாக அதை எடுத்துக் கொள்ள முடியும் மற்றும் அந்த கம்பெனியின் ஓனருக்கும் எவ்வளவு பங்குகளை வைத்திருக்கிறாரோ அவர்களுக்கும் அந்த லாபம் சென்றடையும்
இதனால் மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்தும் வங்கிகளிடத்தில் சென்று பணத்தை வாங்காமல் நேரடியாக மக்களிடத்தில் இருந்து பணத்தை வாங்கி அதன் மூலம் தங்களுடைய கம்பெனியில் அதிகமான முதலீடுகளை செய்து அதிக லாபத்தை பெற வேண்டும் என்று எண்ணி பங்குச்சந்தையில் தங்களுடைய கம்பெனியின் பெயரை IPO தாக்கல் செய்கிறார்கள்
IPO இதில் இருக்கக்கூடிய விஷயங்கள் என்னென்ன?
முதல்முறையாக ஒரு கம்பெனியின் பெயரை IPO தாக்கல் செய்யும் பொழுது அதனுடைய ஒவ்வொரு பங்குகளின் தொகை என்ன என்பதை அந்த கம்பெனியின் உரிமையாளர் முடிவு செய்ய முடியும்
மற்றும் முதல் முதலாக IPO தாக்கல் செய்யும்பொழுது அந்த கம்பெனியின் முதலாளி உதாரணத்திற்கு தங்களுடைய பங்குகளின் விலை 100 ரூபாய் என்று எண்ணி அதை விற்பனை செய்கிறார் என்றால் அதனுடைய IPO முடிந்த பின்பு அதனுடைய விலையானது 50 ரூபாயாகவும் குறையலாம் அல்லது 200 ரூபாயாகவும் கூடலாம்
அதனால் IPO தாக்கல் செய்யும்போது ஒரு பங்கின் விலை 100 ரூபாயாக இருக்கிறது என்றால் இறுதி வரைக்கும் முதல் முதலாக வரும் பொழுது 100 ரூபாயாக தான் அதனுடைய பங்கு இருக்கும் என்று எண்ணுவது தவறு
அந்தப் பங்கின் விலை எந்த நேரத்திலும் இறங்கவும் செய்யலாம் ஏறவும் செய்யலாம் அதனை அறிந்து தான் IPO முதல் முதலாக வரும் பொழுது வாங்க முடியும்
இதில் அதிகமான பணம் செலவும் ஆகலாம் அதிகமான பணம் மிச்சப்படுத்தவும் முடியும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் அப்படி இருப்பதால் இதனை நல்ல முறையில் கவனித்து அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து அந்த நிறுவனத்தின் IPO வாங்க வேண்டும்
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் IPO என்பது தங்களுடைய கம்பெனியை முன்னேற்றுவதற்காக மக்களிடத்தில் சென்று பணம் வாங்கி தங்களுடைய கம்பெனியை முன்னேற்றிவிட்டு அதிலிருந்து வரக்கூடிய லாபத்தை மக்களுக்கும் சிறிய சிறிய தொகையாக பிரித்துக் கொடுப்பதுதான் இந்த IPO ஆகும்.