What is Inflation? Printing More MONEY ? Tamil
What is Inflation? Printing More MONEY ? உங்கள் பணத்தின் உண்மையான மதிப்பு என்ன
பணத்தின் மதிப்பினை நாம் ஒவ்வொரு நாளும் குறைத்துக் கொண்டே வருகிறோம் என்பதுதான் உண்மையான விஷயம்
போன வருடத்தில் பத்து ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு பொருளை இந்த வருடத்தில் 11 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியது இருக்கும்
அப்படி இல்லை என்றால் பத்து ரூபாய்க்கு போன வருடத்தில் வாங்கிய பொருளின் அளவை குறைத்து நமக்கு கொடுப்பார்கள்
இதற்கு முக்கியமான காரணம் பணத்தின் மதிப்பு ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே இருக்கிறது
அமெரிக்காவில் $1 டாலர் என்பது இந்தியாவில் ₹80 ரூபாயை தாண்டி சென்று கொண்டிருக்கிறது
அமெரிக்காவில் ஒரு ரூபாயாக்கு வாங்கக்கூடிய பொருளின் விலை நம்முடைய நாட்டில் 80 ரூபாய்க்கு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம் இதுதான் அனைவருக்கும் புரியக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது
இந்தப் பணவீக்கம் ஏன் ஒவ்வொரு வருடமும் வந்து கொண்டிருக்கிறது இது ஏன் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது இதை எவ்வாறு சமாளிப்பது மற்றும் எத்தனை வகையான பணவிக்கங்கள் இருக்கிறது என்பதை ஒவ்வொன்றாக இப்பொழுது பார்க்கலாம்
- COST PUSH INFLATION
- DEMAND INFLATION
- HYPER INFLATION
நாட்டில் அதிகமாக ஏற்படக்கூடிய இந்த மூன்று விதமான பண வீக்கத்தை பற்றி இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம்
COST PUSH INFLATION
அன்றாட தேவைக்கு நாம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய அனைத்து ஒவ்வொரு பொருளுக்கும் நாம் வரி கட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது நமக்கு தெரியுமா
உதாரணத்திற்கு வீட்டிற்கு அத்தியாச தேவையான இருக்கக்கூடிய காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் பைக் கார் போன்றவற்றை ஓட்டுவதற்கு தேவையான பெட்ரோல் டீசல் போன்றவற்றில் நாம் அளவுக்கு அதிகமான வரிகளை கட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க கூடுமோ?
நீங்கள் தினம் தினம் சமையல் செய்வதற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் கிழங்குகளை வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் இது எங்கே இருக்கிறது எங்கே விளைகிறது எங்கே இருந்து வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா
இது விளைகின்ற இடத்தில் இதனுடைய விலை என்பது குறைவாகத்தான் இருக்கும் அதாவது ஒரு கிலோ தக்காளியின் விலை 10 ரூபாயாக இருக்கிறது என்றால் அங்கே இருந்து நீங்கள் மற்றொரு இடத்தில் வாங்குகிறீர்கள் என்றால் அதனுடைய விலை 12 ரூபாய் அல்லது 13 ரூபாயாக இருக்கும்
ஏன் தக்காளியின் விலை உற்பத்தியாகின்ற இடத்தில் பத்து ரூபாயாகவும் மற்றொரு இடத்தில் 13 ரூபாயாகவும் இருப்பதற்கு காரணம் என்னவென்றால் ட்ரான்ஸ்போர்ட் ஆகும்
வேறொரு நகரத்திலிருந்து உங்கள் வீட்டின் அருகே உள்ள கடைகளுக்கு அந்த பொருள்களை எடுத்துக் கொண்டு வருவதற்கு ஆகும் செலவு தான் இந்த பணத்தின் மதிப்பை கூட்டுகிறது
ஏனென்றால் அவர்கள் உபயோகப்படுத்தும் லாரிகள் மற்றும் வாகனங்களில் பெட்ரோல் டீசல் போன்றவற்றை பயன்படுத்தி வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு செலவுகளை அவர்கள் செய்கிறார்கள் அதனுடைய பணத்தையும் வியாபாரிகள் அந்தப் பொருளை விற்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து அதைப் பெற்றுக் கொள்கிறார்கள் அதனால் தான் அதனுடைய மதிப்பு என்பது விளையும் இடத்தில் குறைவான விலையிலும் மற்றொரு இடத்தில் அதே பொருளின் விலை அதிகமான விலையிலும் கிடைக்கிறது
பெட்ரோல் டீசல் தங்கம் போன்ற பொருள்கள் இந்தியாவில் இல்லை அதை நாம் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம்
இப்படி இருக்க இது உற்பத்தியாகின்ற இடத்தில் குறைவான விலையில் கிடைத்துக் கொண்டிருக்கிறது ஆனால் அதை கடல் கடந்து அல்லது விமான மூலமாகவோ அல்லது கப்பல் மூலமாகவோ நம்முடைய நாட்டிற்கு கொண்டு வருவதற்கு ஆகும் ட்ரான்ஸ்போர்ட் செலவை சேர்த்து தான் நம்மளுடைய நாட்டில் அதை விற்பனை செய்யும் பொழுது அதிக தொகையாக கணக்கிடப்படுகிறது
முக்கியமாக ட்ரான்ஸ்போர்ட்டில் அதிகமான செலவு இருப்பதால் ஒருமுறை பொருட்களை எடுத்து வருவதற்கு ஆகும் செலவை கணக்கிட்டு அவர்கள் அதிகமான பொருட்களை அந்த ஒரே முறையில் எடுத்து வந்து கொள்கிறார்கள் இதனால் ட்ரான்ஸ்போர்ட்டில் இருக்கக்கூடிய செலவுகளை சற்று குறைக்க முடியும்
அதாவது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கிலோவாக எடுத்துக் கொண்டு வருவதற்கு பதிலாக ஒரே முறையில் 100 கிலோவாக எடுத்துக் கொண்டு வரும் பொழுது அதனுடைய டிரான்ஸ்போர்ட் செலவு என்பது சற்று குறைவும் அதனால் நாம் குறைந்த விலையில் பொருள்களை வாங்கவும் முடியும்
DEMAND INFLATION
ஒரு பொருட்களை வாங்கி உங்களுக்கு சொந்தமாக வைத்து விட்டீர்கள் என்றால் அது அந்த சமயத்தில் கிடைக்காத நேரத்தில் உங்களுடைய கையில் மட்டுமே அது இருக்கும் அந்த சமயத்தில் அதனுடைய விலையை தீர்மானிக்க வேண்டியது அந்த பொருளுக்கு சொந்தக்காரர் தான்
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு முக்கியமான நிலப்பகுதியை வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்றால் அந்த நிலமானது அதிக மக்களால் விரும்பப்பட்டு அதிகமான மக்கள் எனக்கு வேண்டும் என்று சொல்லி ஆவலாக கேட்டு வரும் பொழுது நீங்கள் அந்த நிலத்தின் தொகை என்ன என்பதை நீங்களே முடிவு செய்யலாம்
யாரிடத்தில் இருந்து அதிகமான தொகை வருகிறதோ அவர்களிடத்தில் நாங்கள் இதை விற்பனை செய்வோம் என்கின்ற கணக்கில் உங்களுடைய பொருளுக்கு அதிகமான விருப்பங்கள் மக்கள் தேர்வு செய்யும் பொழுது அந்த பொருளுக்கான முழு தொகையை அந்த பொருளின் உரிமையாளராக இருக்கக்கூடியவர் முடிவு செய்ய முடியும்
மார்க்கெட்டில் சென்று பார்க்கும் பொழுது தக்காளி எங்கேயும் இல்லை என்றால் அந்த சமயத்தில் ஒரே ஒரு கடையில் மட்டும் தக்காளி இருக்கும் அந்த நேரத்தில் அந்த கடையில் சென்று தக்காளியின் விலையை விசாரிக்கும் பொழுது அதனுடைய விலை என்பது அதிகமாக உயர்ந்து காணப்படும்
அதற்கு என்ன காரணம் என்றால் வேறு எந்த கடைகளிலும் தக்காளி கிடையாது தங்களிடத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பதால் அதனுடைய விலையை அந்த கடையின் உரிமையாளர் தான் முடிவு செய்கிறார் இதை தான் டிமாண்ட் பணவீக்கம் என்று கூறுகிறார்கள்
HYPER INFLATION
கடந்த பத்து வருடமாக உங்களை நீங்களே சோதித்து ஆராய வேண்டும்
ஏனெனில் கடைகளில் சென்று ஒரு ரூபாய் கொடுத்து அதிகமான பொருட்கள் வாங்கிய நாட்களும் உண்டு
ஆனால் இப்பொழுது ஒரு ரூபாயின் மதிப்பு என்பது அவ்வளவாக இல்லை இதற்கு காரணம் என்ன என்பதை நீங்கள் அறிய முடியும் அதுதான் பணம் வீக்கம் இருந்தாலும் உங்களுக்கான முக்கியமான ஒரு கேள்வி என்னவென்றால் ஒரு ரூபாய்க்கு இவ்வளவு பொருட்கள் வாங்க முடிகிறதே இப்படி இருக்க இந்த பணத்தை உருவாக்குகின்ற இந்தியன் ரிசர்வ் வங்கி ஏன் அதிகமான ஒரு ரூபாய்களை உருவாக்கவில்லை அதிகமான பணத்தை உருவாக்கினார்கள் என்றால் அனைத்து மக்களிடத்திலும் ஒரு ரூபாய் போய் சேர்ந்து விடும் அப்பொழுது அனைத்து மக்களும் அந்த ஒரு ரூபாய்க்கான அதிகமான பொருட்களை வாங்குவார்களே என்று நினைத்து பார்த்திருப்பீர்கள்
இதனுடைய சிறிய விளக்கம் என்னவென்றால் பணத்தை அச்சடிக்கின்ற அரசாங்கம் அதிகமான பணத்தை அச்சடிப்பதன் மூலம் இந்த HUPER பணவீக்கம் ஏற்படுகிறது
அதனால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு அரசாங்கமும் பணத்தை அச்சிடுவதில் அதிக கவனம் செலுத்தி சரியான முறையில் பணத்தை அச்சடிக்கிறது
ஒருவேளை பணத்தை அளவுக்கு அதிகமாக அச்சிட்டார்கள் என்றால் என்னென்ன நிகழும் என்பதற்கு உலகத்தில் அதிகமான நாடுகள் இதை செய்து அதிகமான பணவீக்கத்தையும் பெற்றிருக்கிறது
வங்காளதேஷ் மற்றும் சிம்பாவை போன்ற நாடுகள் இதே தவறை தான் செய்தது
தங்களுடைய நாட்டின் கடன் அதிகமாக இருக்கிறது அதை உடனடியாக அடைக்க வேண்டும் என்பதற்காக தாங்களே அதிகமான பணத்தை அச்சிட்டு தங்களுடைய நாட்டின் கடனை உடனடியாக அடைத்து விட்டது
இதனால் அந்த நாட்டில் அதிகமான பணப்பழக்கம் அனைத்து மக்களிடமும் ஏற்பட்டுள்ளதால் ஒவ்வொரு நாளும் 100 மடங்கு பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது
எவ்வாறு என்றால் ஒரு பொருளை 100 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம் என்றால் அடுத்த நாள் அதனுடைய விலை 200 ரூபாயும் அதுக்கு அடுத்த நாள் 400 ரூபாயும் அதுக்கு அடுத்த நாள் 800 ரூபாயும் இவ்வாறு 100 மடங்கு பொருட்களின் விலை ஏறி அளவுக்கு அதிகமான பணம் வீக்கம் ஏற்பட்டுள்ளது
தற்பொழுது நாம் ஒரு கிலோ தக்காளியை 100 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம் என்றால் பணம் வீக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை என்பது ஒரு கோடி ரூபாயாக இருக்கும்
பண வீக்கம் அளவுக்கு அதிகமாக ஏற்பட்டுள்ள நாடுகளில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் மற்றும் 100 ரூபாய்களில் செலவு செய்யாமல் கோடி கணக்கில் தான் ஒவ்வொரு சிறிய பொருட்களையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் அந்த நாட்டில் அனைத்து மக்களிடத்திலும் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது அதனால் அந்த கோடிகளின் மதிப்பு என்பது அனைவருக்கும் ஒரு சிறிய தொகையாகவே கணக்கிடப்படுகிறது
இந்த மூன்று விதமான பணம் வீக்கத்தை தவிர உள்நாட்டு பணவீக்கம் மற்றும் வெளிநாடுகளில் ஏற்படக்கூடிய பண வீக்கமும் அதிகமாக காணப்படும்
ஏனென்றால் நம்முடைய அத்தியாவசிய தேவைக்கு நாம் ஒவ்வொரு நாளும் மற்றவர்களை சார்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் உதாரணத்திற்கு இந்தியாவில் இருக்கின்ற காய்கறிகள் பழங்களை ஏற்றுமதி செய்துவிட்டு வெளிநாடுகளில் இருக்கின்ற கேமரா மொபைல் போன்றவற்றை நாம் இறக்குமதி செய்கிறோம்
இதில் காய்கறி மற்றும் பழங்களின் விலை குறைவாகவும் கேமரா மற்றும் மொபைல் போன்களின் மதிப்பு அதிகமாகவும் காணப்படுவதால் அதிகமான காய்கறிகளையும் அதிகமான பழங்களையும் நாம் உற்பத்தி செய்து அதை கொடுக்கிறோம்
அந்த அதிகமான காய்கறிகளையும் பலங்களையும் உற்பத்தி செய்வதற்கு நாம் அதிகமான செலவுகளை செய்கிறோம் அப்படி அதிகமான செலவு செய்து அதிகமான விவசாய பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொழுது அங்கே அவர்கள் குறைந்த செலவில் அவர்களுடைய பொருட்களை உற்பத்தி செய்து நம்முடைய நாட்டிற்கு அதை அதிகமான விலையில் கொடுத்து விடுகிறார்கள் இதனால் மிகப்பெரிய பணவீக்கம் ஏற்படுகிறது
இங்கே நாம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகின்ற மொபைல் போன் அதை உற்பத்தி செய்கின்ற நாட்டிற்குப் போய் வாங்கும் பொழுது அதனுடைய விலை 400 அல்லது 500 ரூபாயாக இருக்கிறது
ஆனால் நாம் காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்து அதிகமான செலவு செய்து அதை மற்றொரு நாட்டிற்கு குறைவான விலையில் விற்கும் பொழுது அளவுக்கு அதிகமான பணவீக்கம் ஏற்படுகிறது
இந்தப் பண வீக்கத்தை ஒவ்வொரு மனிதர்களும் தங்களுடைய வாழ்க்கையில் தவிர்ப்பதற்காக கடந்த பத்து வருடத்தில் தங்களுடைய நாட்டில் எந்த அளவிற்கு மனைவிக்கும் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் போல் பணத்தை சேமிக்க வேண்டும்
உதாரணத்திற்கு 10% பணவீக்கம் ஒவ்வொரு வருடமும் ஏற்படுகிறது என்றால் பத்து 11% அதிகமான பணம் கிடைக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய பணத்தை நீங்கள் சேர்த்து வைக்க வேண்டும்
அவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது உங்களுடைய சேமிப்பு என்பது அதிகமான தொகையாகவும் மட்டுமல்லாமல் அந்த வருடத்தில் எவ்வளவு பணம் வீக்கம் இருக்கிறது அதையும் கடந்து உங்களுக்கு கிடைக்கும்
அதனால் இந்த பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உங்களுடைய பணத்தை அதிக தொகையில் கிடைக்கின்ற இடத்தில் முதலீடு செய்வதன் மூலம் இந்த பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.