TamilNad Mercantile Bank 300 Days Deposit Tamil
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் 01/01/2023 அன்றிலிருந்து புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள்
இந்த திட்டமானது இந்திய வாழ் மக்களுக்கும் சீனியர் சிட்டிசன் என்று அழைக்கப்படும் வயது முதிர்ந்தவர்களுக்கும் அதிகமான பயனளிக்க கூடியதாக இருக்கிறது
அதோடு மட்டுமல்லாமல் அதிக வட்டியை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு வருடத்தில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்கின்ற திட்டத்தில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது
- Validity ; 300 Days
- Senior citizen : 8.5%
- General citizen : 8.00%
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் புதிதாக கொடுக்கப்பட்டுள்ள இந்த அதிக லாபம் தரக்கூடிய இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்
இதில் இருக்கக்கூடிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்
இது மாத மாதம் கட்ட கூடிய பணத்தொகையாக இல்லாமல் உங்களிடத்தில் இருக்கக்கூடிய மொத்த தொகையையும் ஒரே முறையாக செலுத்த வேண்டும்
உதாரணத்திற்கு உங்களுடைய கைகளில் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது என்றால் அந்த ஒரு லட்சம் ரூபாயையும் செலுத்தி விட்டு அதை 300 நாட்கள் கழித்து எடுக்க வேண்டும்
300 நாட்கள் கழித்து நீங்கள் எடுக்கும் பொழுது சாதாரண ஒவ்வொரு மனிதருக்கும் 8% வட்டி விகிதத்தில் கொடுக்கப்படும்
சீனியர் சிட்டிசன் என்று அழைக்கப்படும் வயது முதிர்ந்தவர்களுக்கு 8.5% வட்டி விகிதத்தில் கொடுக்கப்படும்
இது மற்ற வங்கிகளை காட்டிலும் வட்டி அதிகமாக இருப்பதால் இதில் உடனடியாக சேர்ந்து பயன்பெற வேண்டும் என்று அந்த வங்கி அதிகமான விளம்பரங்களை செய்து வருகிறது
இந்தத் திட்டத்தை வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுடைய மொபைல் போனில் TMB MBANK என்ற மொபைல் அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து அதன் மூலம் உங்களுடைய வங்கிக் கணக்கை முழுவதும் நிர்வாகித்துக் கொள்ள முடியும்
அந்த மொபைல் அப்ளிகேஷனிலேயே உங்களுடைய பணத்தை செலுத்தி உங்களுடைய இந்த புதிய திட்டத்தை தொடங்கலாம் நீங்கள் இதற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய தேவையே கிடையாது
நீங்கள் என்னென்ன திட்டம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவை அனைத்தும் அந்த TMB MBANK மொபைல் அப்ளிகேஷனில் அனைத்தும் விரிவாக கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் சென்று முழு விவரங்களையும் செய்து கொள்ள முடியும்.
அதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் இப்பொழுது தமிழ்நாடு மட்டுமல்லாமல் குஜராத் டெல்லி மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் தன்னுடைய புதிய கிளைகளை திறந்துள்ளது
இப்பொழுது புதிதாக பங்குச் சந்தைகளிலும் IPO தாக்கல் செய்து இன்னும் அதிகமான மாநிலங்களில் தங்களுடைய கிளைகளை கொண்டு வர வேண்டும் என்பதற்காக அதிகமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது
முக்கியமாக இந்த வங்கிகளில் அதிகமான வியாபாரிகள் சிறு தொழில் செய்பவர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் அதிகமான வங்கி கணக்கை இங்கே வைத்திருக்கிறார்கள்
அதனால் இந்த வங்கியை பொறுத்தவரையில் ஏழைகளின் வங்கி என்றே சொல்லலாம்
மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும் பொழுது இந்த வங்கியில் அதிகமான லாபம் என்றும் எதுவும் இல்லாமல் நேர்மையான முறையில் நடத்தையும் ஏடிஎம் கார்டுகளுக்கு வருட வருடம் பிடிக்கும் தொகை குறைவாகவும் காணப்படுகிறது
அதனால் உங்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்றால் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்யும் அளவிற்கு ஏற்ற வங்கியாக தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் இருக்கிறது.