பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (27/2/2023)
BSE மும்பை பங்குச்சந்தை 176 புள்ளிகள் குறைந்து 59,288 புள்ளிகளுடன் நிறைவடைந்தது
NSE தேசிய பங்குச் சந்தை 73 புள்ளிகள் குறைந்து 17,393 புள்ளிகளுடன் நிறைவடைந்தது
National stock Exchange ( NSE – 17,393 )
Bombay Stock Exchange ( BSE – 59,288 )
ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹ 41,608
ஆபரண தங்கம் ஒரு கிராம் ₹ 5,201
வெள்ளி ஒரு கிராம் ₹ 69.00
கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் ₹ 6307.00
பெட்ரோல் விலை சென்னையில் ₹ 102.63
டீசல் விலை சென்னையில் ₹ 95.50
$ டாலரும் மதிப்பு இந்திய ரூபாயில் ₹ 82.67
€ யூரோவின் மதிப்பு இந்திய ரூபாயில் ₹ 87.50
உலகத்தில் மூணாவது பணக்காரர் பட்டியலில் இருந்த கௌதம் அதானி தற்பொழுது 26 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்
அதானி குழுமத்தில் 5 பெரிய நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு செய்து உள்ளது அந்த முதலீடுகளின் தொகை 11 விழுக்காடு குறைந்து உள்ளது
எல் ஐ சி யின் பங்குகளின் சந்தை மதிப்பு விலை30,127 கோடி ரூபாயாக இருந்து 26 ஆயிரத்து 861 கோடி ரூபாயாக சரிந்துள்ளது
எல் ஐ சி யின் பங்குகள் அடிப்படை விலையை விட 11 விழுக்காடு குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது
பேடிஎம் இன் பங்குகளை ஏர்டெல் நிறுவனத்தின் தலைவரான சுனில் மிட்டல் வாங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
அமெரிக்கா வாஷிங்டனில் அமைந்துள்ள உலக வங்கியின் தலைவராக அஜய் பங்கா தேர்வாகியுள்ளார்
இவர் அட்லாண்டிக் என்ற ஈக்விடீடி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார், மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கிறார்
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவரான நாராயணமூர்த்தி கூறுகையில் 1940 களில் இந்தியாவும் சீனாவும் ஒரே நிலையில் இருந்ததாகவும் தற்போது சீன நம்மை விட ஆறு மடங்கு வளர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்
இந்தியாவில் திரவ இயற்கை எரிவாயு எட்டு மாதங்களாக இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது, அந்த இயற்கை திறவ எரிவாயுவை இந்தியாவின் கிழக்கு கடற்கரை ஓரங்களில் அதானியின் குழுமம் மற்றும் பிரான்சை சேர்ந்த ஆற்றல் நிறுவனமான டோட்டலும் சேர்ந்து எடுக்க உள்ளதாக கூறுகிறது
மின்சார வாகனங்களுக்கு 5% வரியை தான் விதித்து வருகிறது மத்திய அரசாங்கம் ஆனால் ஜிஎஸ்டி மட்டும் 28% கூடுதலாக செஸ் கிடையாது என்பது போல் அறிவித்துள்ளது
இதே போல் எந்த வகையான ஆட்டோமொபைல் வாங்கினாலும் தற்போது 28 சதவீதம் ஜிஎஸ்டி உள்ளது
இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் யுபிஐ பணம் அனுப்பும் வசதியை உலகம் முழுவதிலும் அனைத்து நாடுகளும் இந்தியாவைப் போலவே செய்ய வேண்டும் என்று கருத்துகளை முன் வைத்துள்ளது