How To Save Money In PPF Account – Tamil
How to Invest in – PPF in Tamil
PPF என்பது இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சேமிப்பு திட்டமாகும்
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு PF என்று சொல்லி மாதம் ஒரு தொகை பிடிப்பார்கள் அதன் மூலமாக வயதான பின்பு அந்த தொகையிலும் இரண்டு மடங்கு பணம் அவர்களுக்கு கிடைக்கும்
ஆனால் சிறு தொழில் மற்றும் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் மார்க்கெட் போன்றவற்றில் வேலை பார்ப்பவர்கள் தாங்களும் பணத்தை இரண்டு மடங்காக சேமிக்க வேண்டும் மற்றும் வயதான முதிர்காலத்தில் எவ்வாறு தான் வாழ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த PPF சேமிப்பு திட்டமாகும்
இந்த கணக்கை நீங்கள் உருவாக்குவதற்கு சில விதிமுறைகள் உள்ளது
குறிப்பாக இந்த கணக்கு இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் யாரும் இதை திறக்க முடியாது
18 வயதிற்கும் குறைவாக உள்ள நபர்களும் இந்த கணக்கை திறக்கலாம் ஆனால் அவர்கள் பெற்றோர்களின் உதவியோடு மட்டுமே இதை திறந்து பணத்தை சேமிக்க முடியும்
18 வயதை கடந்ததும் அதை அந்த தனி நபர்கள் கையில் எடுத்து தானாகவே இயங்கிக் கொள்ளும் உரிமை கொடுக்கப்படும்
அதன்பிறகு பிறகு எந்த வயது வரம்பும் கிடையாது எத்தனை வயதுக்கு வரைக்கும் வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்து வைத்துக் கொள்ள முடியும்
இந்த PPF கணக்கின் முக்கிய நோக்கம் வயதான காலத்தில் பணம் இல்லாமல் இருக்கக் கூடாது அதற்காக சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகவே இதனுடைய முக்கிய நோக்கமாக இருக்கிறது
இந்த பி பி எஃப் கணக்கை எவ்வாறு திறந்து பணம் எவ்வாறு சேர்ப்பது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்
இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த கணக்கை நீங்கள் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளிலும் திறக்க முடியும் அதை தவிர போஸ்ட் ஆபீஸிலும் இதை நீங்கள் திறக்க முடியும்
குறிப்பாக உங்களிடத்தில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு கண்டிப்பாக தேவை மற்றும் உங்களுடைய புகைப்படமும் தேவைப்படும் நீங்கள் கையொப்பமிட வேண்டும் அதன் பிறகு நீங்கள் யாருக்காக இதை நாமினி போடுகிறீர்களோ அவர்களுடைய பெயரை எழுத வேண்டும்
அதன்பிறகு இந்த கணக்கில் மாதம் 500 ரூபாயிலிருந்து 12 மாதங்களும் ஒன்றரை லட்சம் வரைக்கும் மட்டுமே பணம் போட முடியும்
தற்போது 2023 ஆம் ஆண்டில் இதற்கான வட்டி விகிதம் 7.1% என்ற அடிப்படையில் இப்போது இருக்கிறது சற்று காலம் செல்ல செல்ல இது கூடவும் செய்யலாம் குறையவும் செய்யலாம் ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் இவ்வாறு வட்டிக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
இந்த கணக்கை திறந்தவுடன் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பணம் போட்ட பின்பு 15 வருடங்கள் கழித்து தான் நீங்கள் முழு தொகையையும் எடுக்க முடியும்
குறைந்தபட்சம் ஏழு வருடங்கள் கழித்து ஒரு சிறிய தொகையை எடுக்கலாம் அதன்பிறகு ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு முறையும் நீங்கள் சிறிய சிறிய தொகையை எடுத்துவிட்டு குறைந்த பட்சம் 15 வருடங்கள் முடிந்த பின்பு இந்த பணத்தை முழுவதுமாக நீங்கள் எடுத்துக் கொள்ள முடியும் அப்பொழுது உங்களுக்கு முழு வரி விலக்கு உண்டு
அதன் பிறகு நீங்கள் எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமானாலும் அதை நீங்கள் சேர்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வாறு ஆண்டுகள் செல்ல செல்ல உங்களின் பணத்தின் மதிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கும்
தற்போது உள்ள 7.1% வட்டியில் உங்களுக்கு எவ்வளவு தொகை எத்தனை ஆண்டுகளுக்கு மாதம் எவ்வளவு ரூபாய் சேர்த்தீர்கள் என்றால் எவ்வளவு கிடைக்கும் என்பதை பற்றி நீங்கள் PPF CALCULATOR சென்று உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை நீங்கள் முழுவதுமாக ஆராய்ச்சி செய்து கொள்ள முடியும்
பொதுத்துறை வங்கிகளாக கருதப்படக் கூடிய அனைத்து வங்கிகளிலும் இதை நீங்கள் எளிமையான முறையில் இந்த கணக்கை திறக்க முடியும்
ஆனால் தனியார் வங்கிகளில் அனைத்து வங்கிகளிலும் இந்த கணக்கை திறக்க முடியாது ICICI Bank, HDFC Bank, Axis Bank போன்ற முக்கிய தனியார் வங்கிகளில் மட்டுமே இதை நீங்கள் திறந்து பணம் சேர்க்க முடியும்.
அது அல்லாமல் அஞ்சல் நிலையத்தில் சென்று நீங்கள் இதை திறக்க வேண்டும் என்றால் அஞ்சலகத்திற்கு நேரடியாக சென்று பான் கார்டு ஆதார் கார்டு மற்றும் உங்களுடைய புகைப்படம் கொடுத்து உங்களுடைய கையொப்பமிட்டால் மட்டுமே நீங்கள் நேரடியாக சென்றால் மட்டுமே இதை முழுவதுமாக திறக்க முடியும்
இது சிறு தொழில் செய்பவராக இருக்கலாம் மற்றும் சிறிய வேலை செய்பவராக இருக்கலாம் அவர்களுடைய சம்பளம் 15,000 அல்லது 20000 ஆக இருக்கலாம் அவர்கள் மாதம் 500 லிருந்து எவ்வளவு தொகை வேண்டுமானாலும் சேர்க்கும் பொழுது 15 வருடம் கழித்து அதனுடைய முழு தொகையை நீங்கள் எடுக்கும் பொழுது உங்களுக்கு ஒரு மிகப்பெரிய தொகை கிடைக்கும் என்பது உண்மை
மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் PF பணத்தைக் காட்டிலும் வங்கிகளில் கொடுக்கப்படும் இந்த PPF வங்கி கணக்கானது அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகச்சிறந்த வங்கிக் கணக்காக இருப்பதால் மக்கள் இதை விரும்புகிறார்கள் அதிகமான லாபமும் இதில் கிடைத்துக் கொண்டிருக்கிறது