HDFC BANK SECURITIES TAMIL
மியூச்சுவல் ஃபன்டு பங்குச்சந்தை போன்றவற்றில் வங்கிகள் அதிகமாக ஈடுபடுகிறது
முக்கியமாக hdfc bank, icici bank, axis bank, kotak mahindra இவை அனைத்தும் முக்கிய வங்கிகளாக இருப்பதால் இவைதான் நம்பர் ஒன் நம்பர் டூ இடங்களில் இருந்து அதிகமான ஆதிக்கம் செலுத்துகிறது
இப்பொழுது ஹெச்டிஎஃப்சி வங்கிகளில் இருந்து நாம் எவ்வாறு மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது அதற்காக எச்டிஎப்சி வங்கி எவ்வாறு நமக்கு உதவுகிறது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்
சாதாரண வங்கிகளை போல் இல்லாமல் எச்டிஎப்சி வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் என்பது பத்தாயிரம் ரூபாய்க்கு அதிகமாக காணப்படும்
அப்படிப்பட்ட பத்தாயிரம் ரூபாய் மினிமம் பேலன்ஸ் ஆக இருந்தால் மட்டுமே நீங்கள் எச்டிஎப்சி வங்கிகளில் சேவிங் அக்கவுண்ட் ஓபன் செய்ய முடியும்
எச்டிஎப்சி வங்கியில் HDFC SECURITIES என்கின்ற மொபைல் ஆப் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.
அதன் பிறகு நீங்கள் அவர்களிடத்தில் சென்று எனக்கு இங்கு அக்கவுண்ட் இருக்கிறது நான் டிமேட் கணக்கு திறக்க வேண்டும் என்று கூறும் பொழுது அதற்காக மேனேஜர் தனியாக இருக்கிறார் அவர் உங்களுக்கு டீமேட் கணக்கை இலவசமாகவே திறந்து கொடுப்பார்
கண்டிப்பாக அதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் ஆகலாம் ஏனென்றால் அது ஒரு மிகப்பெரிய வேலை அதை ஒருவர் உங்களுக்கு தனியாக உட்கார்ந்து வேலைகளை செய்து கொடுப்பார்
அதற்கு ஆதார் கார்டு பான் கார்டு மற்றும் வெள்ளை பேப்பரில் எழுதப்பட்ட கையொப்பம் அனைத்தும் தேவைப்படும் இவை அனைத்தையும் சரியான முறையில் செய்து முடித்த பின்பு உங்களுக்கு டீமேட் கணக்கு திறந்த பின்பு இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும் அது சக்சஸ் முடித்த
அதன்பிறகு உங்களுடைய டீமேட் கணக்கை எச்டிஎப்சி சர்வர் மும்பையில் இருக்கிறது அதை முழுவதுமாக சரி பார்த்துவிட்டு நீங்கள் இன்வெஸ்ட்மெண்ட்டை தொடங்க ஆரம்பிக்கலாம்
ப்ரோக்கரேஜ் கமிஷன் எவ்வளவு என்பதை பார்ப்போம்
ஒவ்வொரு ஆர்டருக்கும் தலா இருபது ரூபாய் கமிஷனாக எடுத்துக் கொள்ளப்படும்
அதாவது உரையாடலில் நீங்கள் 100 பொருள்களையும் வாங்கலாம் அவ்வாறு வாங்கினால் உங்களுக்கு 20 ரூபாய் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் அல்லது ஒவ்வொன்றாக நீங்கள் 100 முறை வாங்கினாலும் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் எடுத்துக் கொள்ளப்படும்
அதனால் நீங்கள் எதை வாங்கினாலும் அதிகமாக வாங்கும் பொழுது அதை ஒரே 20 ரூபாயில் முடித்துக் கொள்ளலாம்
அதன் பிறகு எவ்வளவு தொகையை நீங்கள் முதலீடு செய்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல் உங்களுக்கு பர்சன்டேஜ் விகிதத்திலும் எச்டிஎப்சி வாங்கி பணத்தை எடுத்துக் கொள்ளும்
அதிகபட்சமாக 00.50% வரைக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளும்
நீங்கள் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 00.50% என்கின்ற அடிப்படையில் 50.00 ரூபாய் எடுத்துக் கொள்ளப்படும்
இதை நீங்கள் குறைக்க வேண்டும் என்றால் உங்களால் நிச்சயம் முடியும்
அது டீமேட் கணக்கு திறக்கும் போது உங்களிடத்தில் முழுமையாக அதை காண்பிப்பார்கள் காண்பித்து எவ்வாறு குறைக்க வேண்டும் அதற்கு நீங்கள் ஒரு வருடத்திற்கு இவ்வளவு தொகை கட்டினால் உங்களுக்கு முழுவதும் குறைக்கப்படும் என்பது போல் கணக்கு காட்டப்படும்
இவ்வாறு ஒவ்வொரு தொகைக்கும் ஏற்றார் போல் பிரசன்டேஜ் குறைத்து காணப்படும் ஆனால் ஒவ்வொரு ஆர்டருக்கும் இருபது ரூபாய் என்கிற வீதத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது
மற்ற புரோக்கர்களை காட்டிலும் எச்டிஎப்சி வங்கியில் மீது நம்பிக்கை தன்மை அதிகமாக இருப்பதால் முழுவதுமாக நீங்கள் நம்பி இந்த hdfc official ஆக கொடுக்கப்பட்டுள்ள மொபைல் ஆப் மூலம் நம்மால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு நம்பகத்தன்மை வாய்ந்தது
மற்றும் வெலைநாட்களில் பினான்சியல் அட்வைசர் இடத்திலும் நீங்கள் தொடர்பு கொண்டு பேச முடியும்
பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய ஏதேனும் சந்தேகங்களுக்கு எச்டிஎப்சி வங்கியின் ஹெல்ப் லைன் 04440501111 இந்த என்னை தொடர்பு கொள்ளும் பொழுது அவர்கள் உங்களுக்காக அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் சொல்வார்கள்
ஆனால் இவை அனைத்திற்கும் முதலாவது நீங்கள் ஹெச்டிஎப்சி வங்கியில் பத்தாயிரம் ரூபாய் மினிமம் பேலன்ஸ் ஆக போட்டு நிச்சயம் ஒரு சேவிங் கணக்கு திறந்திருக்க வேண்டும்
அப்படி செய்வதன் மூலம் இந்த சேவைகள் அனைத்தும் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும்
அதோடு மட்டுமல்லாமல் நீங்கள் முதலீடு செய்யும் ஒவ்வொரு ஈக்விட்டிக்கும் பணம் உங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து தான் நேரடியாக அங்கே செல்லும்
மற்ற வங்கிக் கணக்கை இதனுடன் இணைக்க முடியாது அதனால் எச்டிஎப்சி வங்கியில் நீங்கள் நிச்சயம் கணக்கு வைத்திருந்தால் மட்டுமே இந்த எச்டிஎப்சி செக்யூரிட்டி மொபைல் ஆப்பை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்
மற்ற பினான்சியல் அட்வைஸர்களை காட்டிலும் எச்டிஎப்சி நம்பிக்கையான வங்கி என்பதால் இதை முழுவதுமாக நம்பி நம்முடைய பணத்தை முதலீடு செய்யலாம் என்பது போல் தெரிகிறது
ஏனென்றால் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் எனும் பொழுது கேள்விகள் கேட்பதற்கு வங்கி பக்கத்திலேயே இருக்கிறது அதனால் அனைத்து கேள்விகளையும் நீங்கள் வங்கியில் நேரடியாக சென்று கேள்வி கேட்க முடியும்
இது அல்லாமல் மொபைல் போனில் வரக்கூடிய எக்கச்சக்கமான புரோக்கர்களை தேர்வு செய்து நீங்கள் அதிலே முதலீடு செய்தீர்கள் என்றால் அவை அனைத்தும் நம்பிக்கை தன்மை வாய்ந்ததா இல்லையா என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.