தங்கம் வாங்க சிறந்த வழி – Best Way to Buy And Invest in Gold Digital Gold vs ETF vs Sovereign Gold Bond
முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கத்தில் அதிகமான முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்
ஏனென்றால் பங்குச்சந்தை போன்றவற்றில் அபாயங்கள் அதிகமாக உள்ளது அதனால் அவற்றை காட்டிலும் தங்கத்தின் விலை வேகமாக ஏறிக் கொண்டிருக்கிறது அது மட்டுமல்லாமல் தங்கம் நம் கைகளில் எப்போதும் இருப்பதால் அதை நம்பி வாங்கலாம் என்று தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று அதிகமான மக்கள் விருப்பம் தேர்ந்தெடுக்கிறார்கள்
அப்படி இருக்க முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த மாதிரியான தங்கம் வாங்கலாம் மற்றும் எத்தனை விதமான தங்கங்கள் இருக்கிறது அதை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்
- PHYSICAL GOLD
- DIGITAL GOLD
- SOVEREIGN GOLD PONDS
- GOLD ETF
- GOLD MUTUAL FUND
PHYSICAL GOLD
தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்று நினைப்பவர்கள் முதலாவது ஞாபகத்துக்கு வருவது கடைகளில் இருக்கக்கூடிய ஆபரண தங்கம் தான்
இந்த ஆபரண தங்கத்தில் என்னென்ன விதமான நன்மைகள் இருக்கிறது மற்றும் என்னென்ன விதமான தீமைகள் இருக்கிறது என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்
தங்கம் வாங்குவது என்றாலே ஒரு சிறப்பு தான் ஆனால் தங்கம் வாங்குவதில் ஆபரண தங்கமாக வாங்க வேண்டும் என்றால் முதலாவது நாம் அதிகமான பணத்தை எக்ஸ்ட்ரா கொடுக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்
- MAKING CHARGES
- WASTAGE
- SAFETY & SECURITY
- GST TAX
ஆபரண தங்கமாக வாங்கி விட்டோம் என்றால் அதற்கு அதிகமான செய்கூலி சேதாரம் கொடுக்க வேண்டியது இருக்கும்
அப்படி இல்லை நான் முதலீடு செய்வதற்காக வாங்கினேன் என்று நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் கோல்டு காயின் வாங்கலாம்
ஆனால் குறைந்தது ஒரு கிராமில் இருந்து தான் வாங்க முடியும்
ஏனென்றால் ஒரு கிராமுக்கும் குறைவான தங்கம் இல்லை என்பதால் குறைந்தது ஒரு கிராம் என்ன தொகையோ அதை கொடுத்து தான் வாங்க வேண்டும்.
ஆனால் கோல்ட் காயினுக்கும் 3%GST கொடுத்து தான் வாங்க வேண்டும்
மற்றும் இதை வாங்கி வைத்த பின்பு இதனால் நமக்கும் எந்த விதமான நன்மையும் வராது
ஏனென்றால் ஆபரணமாக வாங்கினீர்கள் என்றால் அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அணிந்து கொண்டு செல்ல முடியும் ஆனால் காயினால் வாங்கும் போது அதை வாங்கி அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும் அதனுடைய பாதுகாப்பு என்பது முக்கியமாக இருக்கும்
உதாரணமாக இந்த கோல்ட் காயினை வாங்கி ஒரு பத்து வருஷத்துக்கு நீங்கள் வைத்துக் கொள்கிறீர்கள் என்றால் அந்த பத்து வருஷத்திற்கும் நீங்கள் இதை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும்
அது உங்களுடைய வீட்டில் எங்கே வைத்திருக்கிறோம் என்று தெரியாமல் வைத்து விடக்கூடாது தொலைத்து விடக்கூடாது மற்றும் திருடு போய் விடக்கூடாது அந்த அளவிற்கு அதை பாதுகாப்பாக வைத்து அதனுடைய முழு முதலீட்டையும் எடுத்து அதனுடைய பலனை அனுபவிக்க வேண்டும்
மற்றும் நீங்கள் அதிகமாக வாங்கி விற்கும் பொழுது ஒரு வருடத்திற்கு சம்பாதிக்க வேண்டிய தொகையை காட்டிலும் அதிகமாக சம்பாதித்து விட்டீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் வருமான வரித்துறைக்கு வரி செலுத்த வேண்டியது இருக்கும்
இவ்வாறு நீங்கள் ஒரு கோல்டை நேரடியாக கடைகளுக்கு சென்று ஆபரணமாகவோ காயினாகவோ வாங்கினீர்கள் என்றால் எவ்வளவு சிக்கலையும் தாண்டி பணம் செலுத்தி வாங்கி அதை சேமித்து வைக்க வேண்டும்
DIGITAL GOLD
இது அல்லாமல் நீங்கள் டிஜிட்டல் முறையிலும் தங்கத்தை வாங்கி வைக்க முடியும்
இது எங்கே வாங்கலாம் என்று கேட்டீர்கள் என்றால் google பே மற்றும் போன் பே ஏர்டெல் பேமென்ட் பேங்க் போன்றவற்றின் மூலமாக நீங்கள் வாங்கலாம்
இதனுடைய முக்கிய நோக்கம் என்னவென்றால் நீங்கள் ஒரு கிராம் அல்லது அதற்கும் குறைவாகவே வாங்கிக் கொள்ளலாம்.
முக்கியமாக நீங்கள் மாதாமாதம் 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் என சேமிக்கும் பொழுது அந்த 100 200 ரூபாய்க்கும் அதற்கு ஏற்றார் போல் கோல்டை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்
இந்த கோல்டு முக்கியமாக மூன்று விதமான கம்பெனிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது
- MMTC PAMP
- AUGMONT
- SAFE GOLD
நீங்கள் குறைந்த தொகையாக மாதம் பெற்றுள்ளது அந்த தொகைக்கு ஏற்றார் போல் சிறிய அளவில் தங்கத்தை இந்த மூன்று நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்காக நீங்கள் கொடுக்கும் தொகைக்கு ஏற்றார் போல் வாங்கி வைத்து பாதுகாக்கும்
இதில் இருக்கக்கூடிய இன்னொரு பிரச்சனை என்னவென்றால் இந்த மூன்று நிறுவனங்களும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் கீழ் வருவதில்லை
ஆதலால் இதை வாங்குவதற்கு முன்பாக சோதித்து அறிந்து விட்டு வாங்குவது சிறந்தது.
இதில் என்னென்ன இருக்கிறது என்றால் இந்த நிறுவனம் உங்களுடைய தங்கத்தை முழுவதும் பாதுகாக்கும் அதற்கு அவர்கள் பாதுகாப்பதற்கு ஏற்ற பணத்தை உங்களிடத்தில் இருந்து வசூலித்துக் கொள்வார்கள்
மற்றும் இது திருடு போய்விடக்கூடாது என்பதற்காக அந்த தங்கத்திற்காக இன்சூரன்ஸ் போட்டு வைப்பார்கள் அதற்கான பணத்தையும் உங்களிடத்தில் இருந்து வசூலிப்பார்கள்
மற்றும் நீங்கள் 100 ரூபாய்க்கு தங்கம் வாங்குகிறீர்கள் என்றால் மூன்று ரூபாய் அவர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டியது இருக்கும்
இவ்வாறு நீங்கள் இந்த தங்கத்தை வாங்கும் பொழுது ஒரு சிறிய தொகையை அவர்களுக்கு கொடுத்து அதிலிருந்து வாங்க வேண்டும் என்கின்ற நிலைக்குள் தான் இருக்கும்
ஏனென்றால் நீங்கள் கொடுக்கக் கூடிய சிறிய சிறிய தொகை அவர்கள் முழுவதும் பாதுகாத்து அதற்கேற்றார் போல் அவர்கள் தங்கத்தை வாங்கி பாதுகாப்பதால் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது
நீங்கள் சிறிய சிறிய தொகையாக சேர்த்து மிகப்பெரிய தொகைக்கு மிகப்பெரிய அளவில் தங்கத்தை வாங்கி விட்டீர்கள் என்றால் அதை நான் பார்க்க வேண்டும் நேரடியாக என்னுடைய வீட்டிற்கு வந்த தங்கம் வர வேண்டும் என்று சொன்னாலும் அதை உங்களுடைய வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்
SOVEREIGN GOLD PONDS
இந்த தங்க பத்திரத்தை முழுவதும் இந்தியன் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது
வருடத்திற்கு இரண்டு முறை இந்த தங்க புத்திரத்தை வங்கிகளில் வாங்கிக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது
இதற்கு செய்கூலி செய்தாரம் கிடையாது எந்தவிதமான வரிகளும் கிடையாது
ஆனால் ஒரு கிராம் என்ற அளவில் இருந்து தொடங்கி 400 கிராம் வரைக்கும் வாங்கலாம்
வாங்கிய பின்பு குறைந்தது நம்முடைய வங்கிகளில் எட்டு வருடம் அதை பாதுகாக்க வேண்டும் அதன் பிறகு தான் இதை கண்டிப்பாக எடுக்க முடியும்
எட்டு வருடம் கழித்து திரும்பவும் இதை அப்பொழுது உள்ள காலகட்டத்திற்கு ஏற்றார் போல் பணமாக மாற்றும் பொழுது நமக்கு அதிக லாபம் கிடைக்கும் மற்றும் எந்த விதமான வரிகளும் கிடையாது
எனவே தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இது ஒரு சிறந்த முதலீடாக கணக்கில் கொள்ளலாம்
GOLD ETF
GOLD EXCHANGE TRADED FUNDS
இது முழுவதும் ரிசர்வ் பேங்க் கீழாகவே வருகிறது
நீங்கள் உங்களுடைய டீமேட் கணக்கு மூலம் இதை தொடங்க முடியும்
ஒவ்வொரு நபர்களும் குறைந்த தொகை 40 லிருந்து 60 ரூபாய் வரைக்கும் கட்டும் பொழுது அனைத்து மனிதர்களுடைய பணத்தையும் எடுத்து அவர்கள் ஒரு கிராம் தங்கம் வாங்கி அதை ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் போட்டு விடுவார்கள்
அது ஏறி ஏறி இறங்கி கொண்டிருக்கும் பொழுது எத்தனை வருடம் கழித்து எடுக்கிறோமோ அப்பொழுது உள்ள தொகைக் ஏற்றார் போல் எடுத்துக் கொள்ளலாம்
இதுலயும் செய்கூலி செய்தாரம் கிடையாது, மற்றும் வரி சம்பந்தமான எந்த ஆவணங்களும் கிடையாது
ஆனால் மொத்தமாக நீங்கள் எடுக்கும் போது வருடத்திற்கு அதிகமாக பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால் அதற்கு வருமான வரித்துறைக்கு நீங்கள் டக்ஸ் கட்ட வேண்டியது இருக்கும்
மற்றும் முக்கியமாக இதற்கு EXPENSE RATIO கண்டிப்பாக இருக்கிறது
என்றால் இது ரிசர்வ் வங்கிய அறிவித்துவிட்டது நீங்கள் 100 ரூபாய்க்கு தங்கம் வாங்குவதாக கொடுக்கிறீர்கள் என்றால் அதற்கு அவர்கள் 95 ரூபாய்க்கு தான் வாங்குவார்கள் ஐந்து ரூபாய் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்
ஏனென்றால் நீங்கள் கொடுக்கின்ற பணத்தை முழுவதுமாக தங்கமாக மாற்றுவதற்காக அங்கே ஒரு மேனேஜர் இருப்பார் அவர் தான் அதை முழுவதும் பார்த்துக் கொள்வார்
அதனால் அவருக்கு என்று இறுதியாக நம் ஒரு அமவுண்டை கமிஷனாக கொடுக்க வேண்டியது இருக்கும்
GOLD MUTUAL FUND
இது ஒரு சிறந்த ஆஃபர் என்று சொல்லலாம்
ஷேர் மார்க்கெட்டில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய அனைவரும் தெரிந்திருப்பீர்கள்
நீங்கள் அனைவரும் கண்டிப்பாக மாதம் ஒரு சிறிய தொகையை மியூச்சுவல் ஃபண்டில் கோல்ட் என்று இருக்கக்கூடிய தனியாக சேர்த்து வைத்தீர்கள் என்றால் இறுதியில் அதற்கான மிகப்பெரிய தொகையை உங்களால் எடுக்க முடியும்
மற்றும் இந்த மியூச்சுவல் ஃபண்ட் அனைத்தும் தங்கம் சம்பந்தமாக இருப்பதால் இதற்குள் மற்றபடியாக எதையும் வைக்காமல் முழுவதும் தங்க சம்பந்தமாக வைத்து உங்களுக்கு அதற்கான தொகையை கொடுப்பார்கள்
இதுவும் நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் சம்பந்தமாக இருப்பதால் இதற்குரிய அனைத்து பாலிசியையும் கடைபிடிக்க வேண்டும் மற்றும் இதற்கான இறுதியில் வரிகள் அதிகமாக இல்லாவிட்டாலும் வருமான வரிகள் மட்டும் இருக்கும்
தங்கம் சேமிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றே சொல்லலாம்
என்றால் இது இந்தியன் ரிசர்வ் வங்கி கீழாகவே இருக்கிறது
இப்போது நாம் பார்த்த அனைத்து வகைகளிலும் நாம் தங்கத்தை சேர்த்து வைக்க முடியும்
அதனால் தங்கம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகமான தொகையை எடுக்க வேண்டும் என்று நினைக்காமல் குறைந்த தொகையாக 100 ரூபாயிலிருந்து உங்களுடைய முதலீடு துவங்கலாம்
இவ்வாறு நூறு ரூபாயில் இருந்து தூங்கும்போது நிச்சயமாக ஒரு பெரிய தொகையில் நம்முடைய தங்கத்தை நிச்சயம் வாங்க முடியும்.