Best Mutual Funds Invest Tamil
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள்
ஏனென்றால் தன்னிடத்தில் இருக்கக்கூடிய பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் அதிக ஆண்டு காலங்கள் காத்திருந்தால் அதிகமான ரிட்டன் நமக்கு கிடைக்கும் என்பது தான் உண்மையான விஷயம்
ஆனால் அதற்கு நாம் சரியான பங்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும்
அவ்வாறு சிறந்த பங்குகளை தேர்ந்தெடுப்பது மூலம் சிறந்த ரிட்டன்களை நம்மால் பெற முடியும்
ஆனால் ஒருவேளை நம்முடைய பங்குகள் தவறாகி விடுமோ என்கின்ற பயம் நிறைய பேருக்கு இருக்கும் இப்படிப்பட்ட மனிதர்களும் மற்றும் முதல் முதலாக பங்குச் சந்தையில் வருகின்ற நபர்களும் நேரடியாக பங்குச் சந்தைகளுக்கு செல்லாமல் அதற்கு மாறாக மியூச்சுவல் ஃபண்டுக்கு சென்று உங்களுடைய தொகையை கொடுப்பதன் மூலம் அவர்களே சிறந்த பங்குகளை தேர்ந்தெடுத்து உங்களுக்காக பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து அதற்கான ரெட்டணை உங்களுக்கு கொடுப்பார்கள்
உங்களுடைய வேலைகள் அனைத்தையும் அவர்கள் செய்வதற்காக அவர்களுக்கு இறுதியில் நீங்கள் ஒரு சிறிய தொகையை கொடுக்க வேண்டியது இருக்கும்
இப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்காக நாம் சென்றவுடன் அனைத்தையும் செய்து விட முடியாது
அதற்காக சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளை கொடுப்பதற்கு எக்கச்சக்கமான நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கிறது
அதிக தொகை போட வேண்டும் என்ற நபர்கள் சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள்
அப்படிப்பட்ட சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக இப்பொழுது பார்க்கலாம்
- UTI MUTUAL FUND
- HDFC MUTUAL FUND
- MOTIAL OSWAL MUTUAL FUND
- NIPPON INDIA MUTUAL FUND
- ICICI MUTUAL FUND
இந்த ஐந்து நிறுவனங்களும் மியூச்சுவல் ஃபண்ட் செய்யக்கூடிய நிறுவனங்களாக இருக்கிறது
இவற்றில் ஒவ்வொன்றும் மியூச்சுவல் ஃபண்டுக்கும் தனித்தனியான பிரிவுகள் இருக்கும் உதாரணத்திற்கு
- UTI NIFTY 50 INDEX FUND DIRECT GROWTH
- UTI NIFTY NEXT 50 INDEX FUND DIRECT GROWTH
- UTI MIDCAP INDEX FUND
- UTI SMALL CAP INDEX FUND
- UTI LARGE CAP INDEX FUND
என்று எக்கச்சக்கமான வகைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
அவற்றில் நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய விதமானது நமக்கு ஏற்ற விதமாக இருக்க வேண்டும்
ஆனால் இப்பொழுது மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஐந்து நிறுவனங்களும் இந்தியாவில் மிகப் பெரிய நிறுவனங்களாக இருக்கிறது
ஏனென்றால் கடந்த 25 வருடங்களில் இவற்றின் பலன் என்பது சரியான முறையிலும் அதிக அளவு லாபம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இருக்கிறது
UTI NIFTY 50 INDEX FUND என்று சொல்லப்படக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் ஆனது தேசிய பங்குச் சந்தையில் முதல் 50 இடங்களில் இருக்கக்கூடிய நிறுவனங்களில் மட்டுமே தங்களுடைய முதலீடுகளை செய்வதால் சிறந்த முறையில் லாபங்களை ஈட்டுகிறது
ஒவ்வொரு நிறுவனத்தில் இருந்து லாபம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டாலும் மற்ற நிறுவனங்களுடனான லாபத்தால் அனைத்தையும் சரியான முறையில் நிர்வகித்துக் கொள்ளும்
ஒரு சில கம்பெனிகளில் இருந்து நஷ்டமும் ஒரு சில கம்பெனிகளில் இருந்து லாபமும் வருவதால் மொத்தமாக 50 நிறுவனங்கள் இருப்பதால் இந்த 50 நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகின்ற காரணத்தால் அவற்றின் மொத்தமும் சரியான முறையில் நிர்வகிக்கப்பட்டு ஒரு சிறந்த லாபத்தை பெற முடிகிறது
எனவே இந்தியாவில் இருக்கின்ற சிறந்த ஐந்து மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளை இப்பொழுது பார்த்தோம்.